தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கத்தின் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்றுடன்(அக்டோபர் 31) ஓய்வு பெற்றார்.
இதையடுத்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பசாமி வயது முதிர்வின் காரணமாக நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.
இதனைதொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குநராக இருந்து வந்த எஸ். நாகராஜ முருகனை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கலை.ரா
பேருந்துக்குள் கொட்டித் தீர்த்த மழை!
ரஜினிகாந்த்தை வரவேற்ற கர்நாடக அமைச்சர்!