தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநராக அபய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணீந்தர ரெட்டி இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை சிபிசிஐடி ஏடிஜிபி அபய்குமார் சிங், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவு ஜி.வெங்கட்ராமன், சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏடிஜிபி பாலநாக தேவி, காவல் துறை தலைமையக நிர்வாகப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம், சென்னை காவல் துறை செயல்பாட்டு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
பாதுகாப்புக்கு துப்பாக்கி கேட்கும் விஏஓக்கள்!