புதிய கொரோனா பரவல்: முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!

தமிழகம்

புதிய கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகச் சீனாவில் உருமாறிய பி.எஃப்-7 ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவத் தொடங்கி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவ தொடங்கியுள்ளது. குஜராத்தில் உள்ள 2 பேருக்கும் ஒடிசாவில் உள்ள ஒருவருக்கும் இந்த உருமாறிய பி.எஃப்-7 ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

கட்டாயம் முக கவசம், தனிமனித இடைவெளி, கூட்டங்களை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து மாதிரிகளையும் மரபணு பகுப்பாய்வு செய்யவும் மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவாமல் தடுப்பதற்கு அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழப்புகள் இல்லாத நிலையில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இன்று(டிசம்பர் 22) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆலோசனைக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் பற்றி அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

கலை.ரா

உதயநிதியால் எனக்கு பாரம் குறைந்தது: அமைச்சர்!

“தாயை விட பெரிய சக்தி எதுவுமில்ல” -மதுரையில் நடந்த நெகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0