பல்பிடுங்கிய சர்ச்சை : நெல்லை எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

Published On:

| By Kavi

பல்பிடுங்கிய விவகாரத்தில் திருநெல்வேலி எஸ்.பி.சரவணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லை அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் பல்பீர் சிங். இவர் விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்தியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தேசிய மனித உரிமை ஆணையமும், இவ்விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்பீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். தொடர்ந்து, விக்கிரமசிங்கபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைக்குறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து நெல்லை எஸ்.பி சரவணன் உத்தரவிட்டார்.
இந்தசூழலில் நெல்லை எஸ்.பி.மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி இன்று (ஏப்ரல் 3) உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி மாவட்டத்தையும் கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? சேவாக் ஓபன் டாக்!

200 கார்கள், ஐம்பது தட்டுகள்… புதுக்கோட்டையின் முதல் சீர்: எடப்பாடியை அசத்திய விஜயபாஸ்கர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel