தமிழ்நாட்டில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சமீப நாட்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறது.
அந்தவகையில் மேலும் 16 பேரை இடமாற்றம் செய்து இன்று (ஜூலை 22) பிறப்பித்துள்ள உத்தரவில்,
“ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரஹமான் நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும்,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி வணிக வரி துறை இணை ஆணையராகவும்,
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த கற்பகம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை செயலாளராகவும்,
தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநர் கவிதா ராமு, அரசு அருங்காட்சியகங்களின் இயக்குநராகவும்,
தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் அம்பலவாணன், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநராகவும்,
நிதித் துறை இணை செயலாளர் ஹெச்.கிருஷ்ணனுன் கருவூலங்கள் மற்றும் கணக்கு துறை ஆணையராகவும்
திருவள்ளூர் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா நெல்லை மாநகராட்சி ஆணையராகவும்,
இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ரீகாந்த், ஓசூர் மாநகராட்சி ஆணையராகவும்,
அரசு துணை செயலாளர் அனு, கடலூர் மாநகராட்சி ஆணையராகவும்,
நாகை கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், சேலம் மாநகராட்சி ஆணையராகவும்,
சென்னை விருந்தினர் மாளிகை பொறுப்பு அதிகாரி கந்தசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையராகவும்,
குடிமைப் பொருள் விநியோக கழக பொது மேலாளர் சதீஷ், ஈரோடு கூடுதல் ஆட்சியராகவும்,
கைத்தறித்துறை ஆணையர் விவேகானந்தன், நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராகவும்,
பொதுத்துறை கூடுதல் செயலாளர் சிவஞானம், சி.எம்.டி.ஏ. தலைமை செயல் அதிகாரியாகவும்,
நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் ஹனிஷ் சாப்ரா, திருப்பூர் வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும்
தொழில்முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அமிர்த ஜோதி, கைவினைப்பொருட்கள் வளர்சிக் கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இனிமேல் ஆன்லைனில் கட்டிட அனுமதி: வந்தாச்சு புதிய திட்டம்!
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிபிசிஐடி கஸ்டடி: கோர்ட் உத்தரவு!