நெல்லை கண்ணன் உடல் இன்று (ஆகஸ்ட் 19) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழறிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நெல்லை கண்ணன் நேற்று (ஆகஸ்ட் 18) நெல்லையில் காலமானார்.
நெல்லை கண்ணன் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், இலக்கியவாதிகளும் இரங்கல் தெரிவித்தனர்.
இன்று (ஆகஸ்ட் 19) காலை முதலே பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், இலக்கியவாதிகளும், அவரது இறுதி நிகழ்வுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக அவருடைய உடலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேபோன்று அதிமுக, இடதுசாரிகள், என பல்வேறு அரசியல்கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்ப வழக்கப்படி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கருப்பன்துறை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெ.பிரகாஷ்
தமிழறிஞர் நெல்லை கண்ணன் காலமானார்!