வரும் 24 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ள நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் இன்று (செப்டம்பர் 22) தொடங்கியது.
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் சேவைகள் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சென்னை – மைசூரூ, சென்னை – கோயம்புத்தூர் என இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.
இதையடுத்து 3வது ரயிலாக 20645 / 20646 என்ற எண் கொண்ட சென்னை – நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது தெற்கு ரயில்வேயின் கீழ் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் தினமும் காலை 6:00 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு இரவு 10 .40 மணிக்கு நெல்லைக்கு வந்தடையும். மணிக்கு 90 முதல் 110 கிமீ வேகத்தில் இந்த ரயிலானது இயக்க உள்ளதாக கூறப்படுகிறது .
மேலும் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் வந்தே பாரத் நின்று செல்லும். மேலும் நிறுத்தங்கள் குறித்த அறிவிப்புகள் இனி வரக் கூடிய நாட்களில் வெளியாகும்.
சென்னை – நெல்லை ரயில் உட்பட 9 ரயில்களை வரும் 24 ஆம் தேதி கணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கிய சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற நிலையில், தினமும் ரயில் புறப்படும் நேரத்தில் ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது.
மோனிஷா
“சுப்மன் கில் அடுத்த விராட் கோலியாக வர விரும்புகிறார்” – ரெய்னா
லேண்டர் ரோவரை மீண்டும் எழுப்பும் முயற்சியில் இஸ்ரோ!
மார்க் ஆண்டனி: விஷாலுக்கு எஸ்.ஜே.சூர்யா வைத்த கோரிக்கை!
33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்: மோடியை பாராட்டிய பெண் எம்.பி-க்கள்!