ஸ்டிரைக் முடிவு தொடரும் : போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!

Published On:

| By Kavi

negotiations with tamilnadu transport workers

negotiations with tamilnadu transport workers

போக்குவரத்து தொழிலாளர்களுடன் நாளை மறுநாள் (ஜனவரி 7) மீண்டும் அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான 15ஆவது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். ஓய்வு பெற்ற  தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஓய்வூதிய பலன்களை தர வேண்டும். வாரிசுதாரர்களுக்கு வேலை நியமனம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன.

பொங்கலுக்கு முன்பாக இந்த ஸ்டிரைக் நடத்தப்பட உள்ளதால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்படக் கூடும். இதனால் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று போக்குவரத்து கழகங்கள் கேட்டுக்கொண்டன.

“பொங்கலுக்கு பிறகு போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், அவர்கள் அழைக்கும் நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்” என்று துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

ஆனால், 9ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இன்று (ஜனவரி 5) காலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்தனர்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் இன்று அமைச்சர் சிவசங்கர் தலைமை செயலகத்தில் ஆலோசனை செய்தார்.

அதைதொடர்ந்து சென்னை பல்லவன் இல்லத்தில் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

Image
சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை உட்பட 20க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,

“போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறார்கள். 15ஆவது ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை சொன்னார்கள்.

நிதி கூடுதலாக செலவாகும் சில விஷயங்களை நிதித்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எட்டிய பிறகுதான் அறிவிக்க முடியும். இதன் காரணமாக ஒரு நாள் நேரம் கேட்டிருக்கிறோம்.

எனவே நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். அன்றைய தினம் முடிவெடுக்கப்படும்” என்றார்.

அவரை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிஐடியு தலைவர் சௌந்தரராஜன், “கடந்த 3ஆம் தேதி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் 9ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம். இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்ததற்கு அமைச்சருக்கு நன்றி. பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படவேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இன்றைய பேச்சுவார்த்தையில் எங்களது 6 கோரிக்கைகளை எடுத்து சொன்னோம். அமைச்சர் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார்.

நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அதுவரை எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரூபாய் 15 கோடி நஷ்டம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தோனி

கொடநாடு விவகாரம் : எடப்பாடி ஆஜராக உத்தரவு!

negotiations with tamilnadu transport workers

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment