நீட் தேர்வு: உத்தரப் பிரதேசம் முதலிடம் – தமிழகத்தில் தேர்ச்சி விகிதம் குறைவு!

Published On:

| By Kalai

நாடு முழுவதும் பல மாநில மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

நடப்பாண்டு நாடு முழுவதும் நீட் தேர்வெழுதிய 17.64 லட்சம் பேரில், 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வில் தேர்ச்சி பெற்ற அதிகபட்ச விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

அங்கு 1.17 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் 1.13 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 82,54 பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வில் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

என்டிஏ வெளியிட்ட அறிக்கையின்படி நீட் நுழைவுத் தேர்வில் 429160 ஆண்கள், 563902 பெண்கள், 7 திருநங்கைகள் என மொத்தம் 993069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி  விகிதம் 6% குறைந்துள்ளது. தேர்வு எழுதிய 1,32,167 பேரில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.,

கடந்த ஆண்டு 57.43% பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 51.28% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தத்தில், 1,42,894 தமிழக மாணவர்கள் பதிவு செய்திருந்தனர் ஆனால் 1,32,167 பேர் மட்டுமே தேர்வெழுதினர்.

கடந்த ஆண்டு 99,610 பேர் தேர்வெழுதி அதில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த ஆண்டு தமிழ் வழியில் 31,965 மாணவர்கள் தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலை.ரா

நீட் தேர்வு: மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்த முதியவர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share