நீட் தேர்வு: தேர்வர்கள் கவனிக்க வேண்டியவை!

தமிழகம்

நாளை நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது.

2023-24ஆம் கல்வியாண்டில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து 16 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் இருந்து 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் ஆவர்.

மணிப்பூரை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் நாளை பிற்பகல் தேர்வு நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு என்னென்ன கொண்டு வரலாம் என்று இச்செய்தியில் பார்ப்போம்.

நுழைவு சீட்டு, நீட் விண்ணப்பத்தில் பதிவேற்றப்பட்டபடி பாஸ்போர்ட் அளவு போட்டோ ஒன்று.
மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், சலுகைகள் ஏதேனும் பெற்றிருப்பின் அதற்கான சான்றிதழ்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசால் வழங்கப்பட்ட அசல் மற்றும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டை இல்லாமல் மாணவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மொபைல் போனில் உள்ள அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், சரியான அடையாளச் சான்றாகக் கருதப்படாது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், அதற்கான மாத்திரைகள் அல்லது பழங்கள் (வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு) மற்றும் தண்ணீர் பாட்டில் போன்ற உணவுப் பொருட்களை தேர்வுக் கூடங்களுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
எடுத்துச்செல்லக் கூடாதவை
அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட பேப்பர்கள், ஜியாமெண்ட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், ஸ்கேல், ரைட்டிங் பேட், பென் டிரைவ், எல்க்ட்ரானிக் பென் ஆகியவை எடுத்துச்செல்லக் கூடாது.
மொபைல் போன்கள், ப்ளூடூத் சாதனங்கள், இயர்போன்கள், மைக்ரோஃபோன்கள், ஹெல்த் பேண்ட், வாலட், கண்ணாடி, ஹேண்ட் பேக், பெல்ட், தொப்பி போன்ற எந்த சாதனங்களும் எடுத்துச் செல்லக் கூடாது.
வாட்ச், பிரேஸ்லெட் உள்ளிட்ட உலோகப் பொருட்களால் ஆன ஆபரணங்களை அணியக் கூடாது.
பேக்கிங் செய்யப்பட பொருட்களுக்கு அனுமதியில்லை.
தேர்வு முடியும் வரை தேர்வறையை விட்டு வெளியே வர அனுமதியில்லை.
மாணவர்கள் கவனிக்க வேண்டியவை
தேர்வு மையத்துக்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். நேர மேலாண்மை மிகவும் அவசியம்.
தேர்வு அறைக்குள் நுழைய இறுதி நேரம் 1.30 மணி ஆகும்.
மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நேரம்
மாணவர்கள் நீட் தேர்வு தொடர்பான மையங்களை https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
ஆடை கட்டுப்பாடு
முழு நீள சட்டை அணியக்கூடாது.
லோ ஹீல் செருப்புகளுக்கு அனுமதி, ஆனால் ஷூ அணிய அனுமதி இல்லை.
மிகவும் இறுக்கமான, பெரிய பாக்கெட், பட்டன், எம்பிராய்டரி, லெகின்ஸ், ஜீன்ஸ் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
குர்தா உள்ளிட்டவை அணிய அனுமதியில்லை.

பிரியா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *