2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு neet exam 2022 result முடிவில் தமிழக மாணவர் 30ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு 497 நகரங்களில் 3,570 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இந்த தேர்வுக்கு 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 17.64 லட்சம் பேர் அதாவது 95% பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி நீட் தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதனால் காலை 10 மணி முதலே தேர்வர்கள் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
முதலில் 10 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது.
ஆனால் இரவு வரை முடிவுகள் வெளியாகாததால் மாணவர்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தேசிய தேர்வு முகமை முடிவை அறிவித்தது neet exam 2022 result.
இந்த தேர்வில் மொத்தம் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி விகிதம் 56.3 சதவிகிதம் ஆகும்.

இதில் ராஜஸ்தானை சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
அடுத்தடுத்த இடங்களில் டெல்லியைச் சேர்ந்த வஸ்தா ஆசிஷ் பத்ரா, கர்நாடகாவைச் சேர்ந்த ஹிரிஷிகேஷ் நகுபுஷான், உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திரிதேவ் 30ஆவது இடத்தையும் மாணவி ஹரிணி 43ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
பிரியா
நீட் தேர்வு – உள்ளாடையை கழற்றச்சொன்ன விவகாரம்: 5 பெண்கள் கைது!