need spy to watch community divisions

சாதிய பிரிவுகள்… கண்காணிக்க உளவு பிரிவு வேண்டும்: திருமாவளவன்

தமிழகம்

சாதிய ரீதியிலான பிரிவுகளை கண்காணிக்க தனி உளவு பிரிவு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரியை சக மாணவர்களே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர நிகழ்விற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

சின்னதுரை மற்றும் அவரது சகோதரி இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு இன்று (ஆகஸ்ட் 15) நேரில் சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வியை சந்தித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாங்குநேரி பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை ஆகியோரை மருத்துவமனையில் சந்தித்தேன் நலமுடன் உள்ளனர். நல்ல மருத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

மாணவன் இன்னும் சில நாட்கள் ஐ.சி யூவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாணவன் உடலில் 21 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளது. வலது கை வலது காலில் கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு அரிவாளை கொண்டு 3 பேர் வெட்டி உள்ளனர். ரத்த குழாய் கை கால் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக சேதமடைந்துள்ளது. மாணவன் மீண்டும் இயல்பாக இயங்கும் வகையில் மருத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள் மற்றும் அரசுக்கு நன்றி

பள்ளி மாணவர்களிடையே நச்சு கருத்தை பரப்புவது புதியதல்ல. பள்ளிகளில் சாதிய மத வாத திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர் பள்ளிகளில் மதவாத உணர்வுகளை புகுத்துகின்றனர். ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்வதும் காவிதுணி வழங்குவதும் நடக்கிறது.

மாணவர்களிடையே நச்சு கருத்துக்கள் பரப்பும் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய்க்கு நல்ல வீடு வழங்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பயில உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி பள்ளியில் படிக்க வைக்க அரசு செய்ய வேண்டும். மாணவர்களிடம் இது போன்ற வன்மம் ஏற்படுவதற்கு சாதிய சூழல்கள் காரணமாக அமைகிறது. வேதம் புதிது படத்தில் பாரதிராஜா இறுதிக் காட்சியில் செய்திருக்கும் காட்சிகளை இப்போது சுட்டிக் காட்ட வேண்டும்.

தீவிரவாத அமைப்புகளை கண்காணிக்க காவல் துறையில் பிரிவு உள்ளது போல சாதிய ரீதியிலான பிரிவுகளை கண்காணிக்க தனி உளவு பிரிவு உருவாக்கப் பட வேண்டும்.

கந்துவட்டி கும்பல்களை அரசு தடுக்க வேண்டும். வள்ளியூர் நாங்குநேரி பகுதிகளை வன்கொடுமை பகுதியாக அறிவிக்கவேண்டும். ஆணவக் கொலை அதிகம் நடந்து வருகிறது.

நெல்லை தூத்துக்குடி பகுதியில் ஜாதியின் பெயரால் வன்முறைகள் நிகழ்கிறது. கூடுதல் கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

தென்மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி நெல்லையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

“உங்களை நாய் கடித்தால் இங்கே வாங்க” : ஈபிஎஸுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தேசிய கொடி இறக்கப்பட்டது!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0