தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த சில நாட்களாக மதுரையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. குறிப்பாக நேற்று இரவு தல்லாகுளம், மூன்றுமாவடி, கோரிப்பாளையம், கோ.புதூர், ஒத்தக்கடை, பார்க் டவுன் போன்ற பகுதிகளில் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
இதனால் பார்க் டவுன் பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. ஆனையூர் உழவர் சந்தைக்குள் மழைநீர் புகுந்ததால், சாலையில் வைத்து காய்கறிகளை விற்கும் நிலைமைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர். இன்றும் சுமார் மூன்று மணி நேரம் மதுரையில் கனமழை பெய்துள்ளது.
மேலும் கோவை, விருதுநகர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் நேற்று மிகக் கனமழை பெய்தது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று(அக்டோபர் 23) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” 23.10.2024: நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24.10.2024: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி. திருப்பத்தூர். திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:
23.10.2024 காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், 23-ஆம் தேதி மாலை முதல் 24 ஆம் தேதி காலை வரை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள்:
23-10-2024 காலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, 23-ஆம் தேதி மாலை முதல் 24 ஆம் தேதி பிற்பகல் வரை மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள்:
23-10-2024 காலை முதல் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து, 23-ஆம் தேதி மாலை முதல் 24 ஆம் தேதி இரவு வரை மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 24 ஆம் தேதி மாலை முதல் 25-ஆம் தேதி காலை வரை மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
அதனால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நிஜ வாழ்க்கையில் இதை செய்யாததுதான் என் தவறு- நடிகை சமந்தா உருக்கம்!
தீபாவளிக்கு ED அதிகாரி அங்கித் திவாரி சொந்த ஊர் செல்ல அனுமதி!
வழிநெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள்… வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி