தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை பெய்து வரும் நிலையில், மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
தென்இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (17.12.2023) 4 தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தாமிரபரணியில் வெள்ளம்!
அதன்படி நேற்று முதல் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து 40,000 கன அடியாக இருப்பதால், முன்னெச்சரிக்கையாக தாமிரபரணியில் 30,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கன மழைபெய்து வருவதால், விரைவில் தாமிரபரணியில் 50,000 கன அடி நீர் திறக்கப்பட உள்ளதால் ஆற்றின் கரையோர பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
NDRF விரைந்தது!
கனமழையால் தற்போது தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு 100 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
நெல்லை: உதவி எண்கள் அறிவிப்பு!
மேலும் இன்னும் 2 நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்துக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் கட்டுப்பாட்டு மையம் – 1077, மீட்பு பணிக்கு 102,102 என்ற எண்களும், அவசர மருத்துவ உதவிக்கு – 108, நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு – 104 எண்களும்
மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2 நாட்களுக்கு மிக கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு?
விடாமுயற்சி: ரிலீஸுக்கு முன்பே ரூ. 250 கோடி வியாபாரம்?