கிருஷ்ணகிரி மாணவி விவகாரம்: டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!

Published On:

| By Minnambalam Login1

krishnagiri NCW

கிருஷ்ணகிரி மாவட்டம் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கிங்ஸ்லி பள்ளியில் இந்த மாதம் 5 முதல் 9-ஆம் தேதி வரை போலி என்சிசி முகாம் ஒன்று நடைபெற்றது. 17 மாணவிகள் பங்கெடுத்த இந்த முகாமில் ஒரு மாணவியை நாம் தமிழர் முன்னாள் நிர்வாகி சிவராமன் ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார்.

இதுகுறித்து வீட்டிற்கு வந்த சிறுமி,  பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அருகே இருந்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சிவராமன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் தான் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த ஆணையம் சென்னை டிஜிபிக்கு இந்த வழக்கை நியாயமாகவாவும், வேகமாகவும் நடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக முழு அறிக்கையை மூன்று நாட்களுக்குள் காவல் துறையும் தமிழக அரசும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கு குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கிருஷ்ணகிரி ஆட்சியாளர் சரயு, ”இது வரைக்கும் 11 நபர்களைக் கைது செய்து இருக்கிறோம். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மனநல மருத்துவர்கள் உதவியுடன் ஆலோசனை வழங்கிவருகிறோம். சம்பவம் நடந்த கிங்ஸ்லி பள்ளியில் தமிழக கல்வித்துறை விசாரணை நடத்தி வருகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் போலியாக நடத்தப்பட்ட என்சிசி முகாமிற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. கைது செய்யப்பட்ட சிவராமன் என்சிசியில் உறுப்பினர் இல்லை என்று என்.சி.சி தலைமை அலுவலகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட நாட்டை உலுக்கியுள்ள சூழ்நிலையில், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாணவிக்கு நேர்ந்துள்ள கொடூரமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

2025 சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் கே.எல்.ராகுலுக்கு இடம் இல்லையா?

‘கலைஞர் எனும் தாய்…’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் நூல்!

அச்சுறுத்தும் ‘குரங்கு அம்மை’: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share