ED ரெய்டா? – நவீன் பில்டர்ஸ் மறுப்பு!
சென்னையில் கட்டுமான நிறுவனங்கள், ரசாயன நிறுவன அதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதில் திருவான்மியூர் லட்சமிபுரத்தில் உள்ள நவீன் பில்டர்ஸ் கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர் நவீன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் விளக்கமளித்து நவீன் பில்டர்ஸ் இயக்குனர் நவீன் (எ) விஸ்வஜெத் குமார் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடந்த 34 வருடமாக நாங்கள் இந்த தொழிலில் இருக்கிறோம். சரியான நேரத்தில் வேலையை முடித்து கொடுப்போம்.
வாடிக்கையாளர்கள் எங்களை பற்றி புகார் கூறியது கிடையாது. நில உரிமையாளர்களுடன் தகராறு கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் வருமான வரி செலுத்தி வருகிறோம். முறைகேடாக எங்களுக்கு எங்கிருந்தும் பணம் வரவில்லை.
என்னுடைய நண்பர்கள் அனைவரும் போன் செய்து உங்களது திருவான்மியூர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறதாமே என்று கேட்டார்கள். நான் ஷாக் ஆகிவிட்டேன். முதலில் நான் திருவான்மியூரில் வசிக்கவில்லை.
நாங்கள் எத்திக்ஸ்க்கு பெயர் போன நிறுவனம். அதற்காக விருதுகள் வாங்கியிருக்கிறோம். ஆனால், எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பதாக வெளியான செய்தி கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பார்வையாளர்களை பணக்காரர்களாக உணர வைக்கும் ‘பிச்சைக்காரன்’!
“செந்தில் பாலாஜியை பழிவாங்க வழக்கு பதியவில்லை”: அமலாக்கத்துறை பதில்மனு!