அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் நடத்தப்படும் தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவர்களை பங்கேற்க அனுப்பாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநில உடற்கல்வி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை இன்று(ஜூன் 9) உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். நீச்சல், கூடைப்பந்து, மல்யுத்தம் உள்ளிட்ட 32 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை அந்தந்த மாநில அரசுகள் தேர்வு செய்து அனுப்புவது வழக்கம்.
தேசிய விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பங்கேற்பதன் மூலம் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும்.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பெறும் மாணவர்களுக்கு ரூ.3 லட்சமும், இரண்டாம் இடம் ரூ.2 லட்சமும், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சமும் அரசு ஊக்கத்தொகையாக வழங்கும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் டெல்லியில் ஜூன் 6-ஆம் தேதி துவங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள 247 மாணவர்களை அனுப்புமாறு தமிழகத்திற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு மே 11-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.
ஆனால் தமிழக அரசு சார்பில் மாணவர்களை தேர்வு செய்து அனுப்பாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணனை இன்று(ஜூன் 9) சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தென்னிந்திய ரசிகர்களுக்கு ஷாகித் கபூரின் கோரிக்கை!
’எங்கிருந்தாலும் வாழ்க’ மைத்ரேயன் விலகல் குறித்து ஓபிஎஸ்
டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா அப்பாயின்ட்மென்ட் யாருக்கு? செந்தில்பாலாஜியை காக்க ஸ்டாலின் வியூகம்!