முன்னுக்கு பின் முரண் : ஆளுநரை சந்தித்த ஆணைய உறுப்பினர்!

தமிழகம்


தீட்சிதர்களின் குழந்தைகள் விவகாரத்தில் முன்னுக்கு பின் முரணாக பேசிய தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் இன்று (மே 29) விசாரணை அறிக்கையை ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாகப் பொய் வழக்குப் போடப்பட்டிருப்பதாகவும், சிறுமிகளுக்குக் கட்டாய கன்னித்தன்மை பரிசோதனையான இரு விரல் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

ஆளுநரின் குற்றச்சாட்டு பற்றிய மின்னம்பலம் புலன் விசாரணையில், குழந்தை திருமணம் நடந்திருப்பது புகைப்பட ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “சிறுமி ஒருவர் முதலிரவுக்கு பால் சொம்பு எடுத்துச் செல்லும்படியான புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. குழந்தைகள் திருமண தடுப்பு சட்டப்படி இது சட்டவிரோதம். ஆளுநர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யக் கூடாது” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் தீட்சிதர்களிடமும், பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்த தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், விசாரணை அறிக்கையை இன்று (மே 29) ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கியுள்ளார்.

முன்னதாக ஆணைய உறுப்பினர் ஆனந்த் முதல் நாள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இருவிரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறினார். பின்னர், ஆளுநர் கூறியதுதான் உண்மை. நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று தன்னிலை விளக்கம் அளித்தார்.

மாற்றி மாற்றி முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கும் இதுபோன்ற சூழலில் அவர் ஏன் ஆளுநரைச் சந்திக்க வேண்டும் என்று கேள்வி எழுந்துள்ளது.
பிரியா

சிஎஸ்கே பவுலர்களை புரட்டி எடுத்த ’சென்னை வீரர்’: பைனல் ட்விஸ்ட்!

விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன்!

+1
0
+1
0
+1
1
+1
1
+1
3
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *