ஏடிஎம் கொள்ளையர்கள் சென்னை வந்தது எப்படி? – நாமக்கல் எஸ்.பி விளக்கம்!

தமிழகம்

ஏடிஎம் கொள்ளையர்களிடம் இருந்து ரூ.67 லட்சம் பறிமுதல் செய்திருப்பதாகவும், அந்தப் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணா இன்று (செப்டம்பர் 28) தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று (செப்டம்பர் 27) அதிகாலை அடுத்தடுத்து மூன்று ஏடிஎம்-களில் வடமாநில கொள்ளை கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்செல்வதாக நாமக்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி போலீசாரின் தடுப்புகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. கண்டெய்னர் லாரியை விரட்டிச் சென்ற போலீசார் கொள்ளையர்கள் ஐந்து பேரை கைது செய்தனர்.

லாரியின் கண்டெய்னரை போலீசார் திறந்தபோது அதில் பதுங்கியிருந்த கொள்ளையன், போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். தற்காப்புக்காக போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளையன் உயிரிழந்தார்.

தொடர்ந்து மற்றொரு கொள்ளையன் தப்பிக்க முயன்றபோது போலீசார் அவர் காலில் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து கொள்ளையர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணா, “ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் வழக்குகள் இல்லை. ஒரு சிலர் மீது ஒரு வழக்கு முதல் ஐந்து வழக்குகள் வரை உள்ளது. மத்திய பிரதேசதம், மகாராஷ்டிரா, கிருஷ்ணகிரி என வெவ்வேறு மாநிலங்களில் வழக்குகள் இருக்கிறது.

அவர்களிடம் விசாரணை நடத்தியவரை ஒரு சிலர் படித்திருக்கிறார்கள், சிலர் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஹரியானா – ராஜஸ்தான் பார்டரில் உள்ள ஹவாட் பகுதியைச் சேர்ந்தவர்கள். கொள்ளையர்கள் அனைவர் மீதும் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம்-களை ஆப்பரேட் செய்பவர்கள் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வலியுறுத்த இருக்கிறோம்.  தற்போது கைதாகியுள்ள கொள்ளையர்கள் ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்களை மட்டுமே அட்டாக் செய்து பணத்தை திருடியுள்ளார்கள். முதல்கட்டமாக அந்தவகை ஏடிஎம்-களில் பாதுகாப்பை அதிகப்படுத்த அறிவுறுத்த இருக்கிறோம்.

டெல்லியில் இருந்து இரண்டு கொள்ளையர்கள் விமானத்திலும், இருவர் காரிலும், இருவர் கண்டெய்னர் லாரியிலும் சென்னை வந்துள்ளனர். பின்னர் சென்னையிலிருந்து திருச்சூருக்கு கார் மற்றும் கண்டெய்னர் லாரியில் சென்றிருக்கிறார்கள். கொள்ளையர்களிடம் இருந்து ரூ.67 லட்சம் பறிமுதல் செய்திருக்கிறோம். அந்த பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பணத்துக்கு மயங்கும் இந்தியர்கள்…. மாயம் செய்யும் சீனர்கள்… என்ன செய்யப் போகிறது மோடியின் டிஜிட்டல் இந்தியா?

குடை எடுத்துட்டுப் போக மறந்துடாதீங்க மக்களே… கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *