ராசிபுரம் நகர திமுக பெண் கவுன்சிலர் தனது கணவர் மற்றும் மகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர மன்றத்தின் 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்தவர் தேவி பிரியா (46). இவரது கணவர் அருண்லால் நகைக்கடை நடத்தி வந்தார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் மோனிஷா (18) இவர்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் ராசிபுரத்தில் உள்ள இவர்களது வீட்டில் அருண்லால், தேவிப்பிரியா தூக்கிட்டும், மகள் மோனிஷா விஷம் அருந்தியும் தற்கொலை செய்து கொண்டுள்ளது இன்று காலை தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம் உள்ளிட்ட காவல்துறையினர் விரைந்து சென்று மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு கடன் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
ஆளும் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
இந்து பொது சிவில் சட்டம்: மத்திய அரசுக்கு திமுக ஐடியா!
ரொமாண்டிக் படங்கள்… தற்கொலைக்கு சமம்: இயக்குநர் மிஷ்கின்