முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஏற்கனவே 9 முறை பரோல் வழங்கப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 22 ) 10வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில்,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து நளினி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியில் வந்த நளினி வேலூர் காட்பாடி, பிரம்மபுரத்தில் உள்ள அவரது கணவர் முருகனின் உறவினர் வீட்டில் அவரது தாயார் பத்மா உடன் தங்கி இருந்து தினந்தோறும் காட்பாடி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரது பரோலை நீட்டிக்க கோரி அவரது தாயார் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை தமிழக அரசுக்கு சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி இருந்தனர்.
இதனையடுத்து வரும் 25ஆம் தேதி முதல் மேலும் 30 நாட்களுக்கு 10 வது முறையாக பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து நளினி வரும் நவம்பர் 24 ஆம் தேதி மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
குவிந்த ரெட் கார்டுகள்… வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அசீம்?
தீபாவளி பரிதாபம்: ஸ்தம்பித்த சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை!