மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து நாகப்பட்டினம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவம்பர் 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்தது.
இன்று (25-11-2024) காலை 08.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதனால் நாளை டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
இந்நிலையில்தான், “கனமழையை எதிர்கொள்ள மயிலாடுதுறை தயாராக உள்ளது” என்று அம்மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கனமழையினால் டெல்டா மக்கள் பாதிக்கப் படாதவாறு இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் அதி கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை விவசாயிகள் அவசர அவசரமாக இன்று சாகுபடி செய்து வருகின்றனர்.
மேலும் இன்று இரவு முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–அப்துல் ரஹ்மான்
ராமதாஸ் குறித்த ஸ்டாலின் பேச்சு : அண்ணாமலை விமர்சனம்!
காப்பீடு திட்டத்தில் மோசடி? முதல்வருக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை!
“பெண்களுக்கு பாதுகாப்பில்லா சமூகம், ஒருபோதும் விடுதலை அடையாது” : கனிமொழி