நாடார் மகாஜன சங்கத் தேர்தல்: உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

தமிழகம்

நாடார் மகாஜன சங்கத் தேர்தலை நடத்த தடையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாடார் மகாஜன சங்கத்திற்கான தேர்தல் நடத்துவது குறித்து கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த தேர்தல் நடவடிக்கைகள் முறையான விதிகளை பின்பற்றி நடத்தப்படவில்லை. எனவே நாளை (6-ந்தேதி) நடக்க உள்ள நாடார் மகாஜன சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து, விதிகளை பின்பற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு அவசர மனுவாக நீதிபதி பவானிசுப்பராயன் முன்பு இன்று(நவம்பர் 5) விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், ஏற்கனவே வெளியான அறிவிப்புகளின் அடிப்படையில் 6-ந்தேதி (நாளை) திட்டமிட்டபடி சுதந்திரமாக அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் தேர்தலை சந்திக்கலாம்.  

தேர்தல் நடக்கும் வளாகத்தில் தேர்தல் விதிகளுக்கு எதிராக யாரும் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடக்கூடாது.

இந்த தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு வசதியாக தேர்தல் அதிகாரிகளுக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய பாதுகாப்பை எந்த கட்டணமும் இன்றி வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கலை.ரா

மோர்பி பாலம் விபத்து: நெஞ்சை உலுக்கும் புதிய தகவல்!

இமாச்சல் தேர்தல் : தமிழக பாணியை பின்பற்றும் காங்கிரஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0