சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெறும் பாகற்காயும் கோதுமையும் கேழ்வரகும்தான் சாப்பிட வேண்டும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி இல்லை; மாவுச்சத்து அதிகம் உள்ள அரிசி, சில காய்கறிகள், கிழங்குகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள சில பழங்களைத் தவிர்த்து மற்ற காய்கறிகள், தானியங்கள், கீரை வகைகள், குறிப்பிட்ட சில பழங்கள் என்று சாப்பிடலாம்.
உதாரணம் நாவல்பழம். இந்த நாவல்பழ லஸ்ஸியில் நோய் குறைபாடு உள்ளவர்கள், ‘ஸ்வீட்னர்’ எனப்படும் மாற்று சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.
என்ன தேவை?
நாவல்பழம் – ஒரு கப்
ஏதாவது ஒரு ஸ்வீட்னர் – அரை கப்
தயிர் – அரை கப்
எப்படிச் செய்வது?
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதில் நாவல்பழங்களைப் போட்டு, ஒரு தட்டினால் மூடி, அடுப்பை அணைத்து விடவும். நன்றாக ஆறிய பிறகு, பழங்களைக் கையால் அமுக்கினால் சதை தனியாக வந்துவிடும். இதை மிக்ஸியில் போட்டு, ஸ்வீட்னர், தயிர் சேர்த்து அரைக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’லென்று பருகவும்.
குறிப்பு: கொழுப்பு குறைந்த பாலில் தயாரிக்கும் தயிரில்தான் இந்த லஸ்ஸியை செய்ய வேண்டும். சர்க்கரை குறைபாடு இல்லாதவர்கள், ‘ஸ்வீட்னர்’ சேர்ப்பதற்கு பதில் சர்க்கரை அரை கப் சேர்த்து தயாரிக்கலாம்.
சண்டே ஸ்பெஷல் – ஒரு நாளைக்கு எத்தனை காபி, டீ குடிக்கிறீர்கள்?
சர்க்கரை நோய்: உணவு குறித்தான கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்!