‘நான் முதல்வன்’ திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வுக்கு மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 2) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டம் என்பது மாநிலத்துக்கு ஒளிமயமான எதிர்காலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட தொலைநோக்குத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ் நான் முதல்வன் போட்டித் தேர்வு பிரிவானது, தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க தேவையான உதவிகளைச் செய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. மேலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்குத் தேவையான விரிவான பயிற்சி, திறன்கள் மற்றும் பிற உதவிகளை, எளிதில் அணுகக்கூடிய வண்ணம் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் போட்டித் தேர்வு பிரிவில், யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ரூ.7,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கான மதிப்பீடு தேர்வு வரும் செப்டம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. மதிப்பீடு தேர்வு அடிப்படையில் 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் ரூ.7,500 வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வுக்கு மாணவர்கள் இன்று (ஆகஸ்ட் 2) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இது தொடர்பான விவரங்களை https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்
விளைவு மோசமாக இருக்கும்: ராஜ்கிரண் ஆவேச பதிவு!