திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மைசூரு – தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலானது நேற்று (அக்டோபர் 11) காலை 10.30 மணியளவில் மைசூரில் இருந்து புறப்பட்டது. இந்த ரயில் பெங்களூரு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் , குண்டூர், பாட்னா வழியாக பிகார் மாநிலம் தர்பங்காவை சென்றடையும்.
மைசூரு – தர்பங்கா ரயில் நேற்று இரவு 7.44 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
அங்கிருந்து குண்டூர் நோக்கி சென்ற ரயில், திருவள்ளூர் அருகே பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை என்ற இடத்தில் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம்புரண்டது, ஒரு பெட்டியில் தீ பிடித்தது. மேலும், 19 பேர் காயமடைந்ததுள்ளனர்
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஸ்பாட்டுக்கு சென்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் மீட்புபணிகளை துரிதப்படுத்தினர்.
காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், காயமடைந்தவர்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். சென்னை அருகே நடைபெற்ற இந்த கோர ரயில் விபத்து பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘வேட்டையன்’ அலப்பறைகள்… அப்டேட் குமாரு
திருவள்ளூர் அருகே பயங்கர ரயில் விபத்து!