அச்சமின்றி பொதுத்தேர்வை எழுதுங்கள் என்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.
இதில் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவ தேர்வாகவும், 10 ஆம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.
பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மார்ச் 13 தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடக்கிறது.
பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.
இந்நிலையில் , அச்சமின்றி பொதுத்தேர்வை எழுதுங்கள் என்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று ( மார்ச் 12 ) வெளியிட்டுள்ள வீடியோவில் “ என் பேரன்புக்குரிய பத்து பதினொன்று மற்றும் பனிரெண்ட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கின்ற மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
என்ன பரிட்சை டென்ஷன்ல இருக்கிங்களா…ஒரு டென்ஷனும் வேணாம்…எந்த பயமும் வேண்டாம்..இது ஜஸ்ட் இன்னொரு பரிட்சை அவ்வளவு தான்.
அப்படித்தான் இத நீங்க அணுகனும். எந்த கேள்வியா இருந்தாலும் நீங்க படிக்கிற புத்தகத்துல இருந்து தான் வரப்போகுது அதனால உறுதியோட அப்ரோச் பண்ணுங்க.
உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும் , மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்க பாதி ஜெயிச்சிட்டிங்க.
தேர்வுன்றது உங்கள பரிசோதிக்கிறது இல்லை…உங்கள அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போறது…உயர்த்தி விடுறது…அதனால மீண்டும் சொல்றேன் எந்த விதமான தயக்கமும் இல்லாம தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். தேர்வ பாத்து பயம் வேண்டாம்.
பாடங்களை ஆழ்ந்து படிங்க. விடைகளை தெளிவா முழுமையா எழுந்துங்க. நிச்சயமா வெற்றி பெறுவீங்க. அந்த வெற்றிக்காக உங்க பெற்றோர், ஆசிரியர போல நானும் காத்திருக்கேன். முதல்வரா மட்டும் இல்ல உங்க குடும்பத்துல ஒருத்தனா வாழ்த்துறேன்”. என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நாளை தொடங்கும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வு: முழு விவரம் இதோ!
குஷ்பூ போலவே…பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஸ்வாதி மாலிவால்