அக்டோபர் 25 அன்று உலக பாஸ்தா தினமாகக் கொண்டாடப்படும் அளவுக்கு மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றான பாஸ்தாவில் மட்டன் சேர்த்து இந்த மட்டன் கீமா பாஸ்தா செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.
என்ன தேவை?
மட்டன் – 250 கிராம் (சுத்தம் செய்து கொத்துக்கறியாக வாங்கிக்கொள்ளவும்)
எல்போ பாஸ்தா – 200 கிராம்
பூண்டு – 4 பற்கள்
வெங்காயம் – 2
குடமிளகாய் – ஒன்று
தக்காளி சாஸ் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
வெண்ணெய், ஓரிகானோ – சிறிதளவு
உப்பு, தண்ணீர் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் பாஸ்தா, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து ஆறு நிமிடங்கள் கொதிக்கவைத்து, பிறகு வேறு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்றாற்போல வெண்ணெய் சேர்த்து அது உருகியவுடன் நசுக்கிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் மட்டன், மிளகாய்த்தூள் சேர்த்து குறைந்த தீயில் வைத்து 30 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், சர்க்கரை மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். கீமா தயார். இதை ஏற்கனவே வேகவைத்துள்ள பாஸ்தா உடன் சேர்த்து ஓரிகானோ தூவி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சேமியா துவரம்பருப்பு பாத்
சண்டே ஸ்பெஷல்: வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?