முந்தைய நாள் சண்டே ஸ்பெஷலாக இருந்தாலும், அதெல்லாம் சுமாராகத்தான் இருந்தது. இன்று காரசாரமாக ஏதாவது சாப்பிடலாமே என்று மனம் ஏங்கும். அப்படிப்பட்ட நிலையில் காரசாரமாக மட்டுமல்ல… நன்றாகக் கடித்துச் சுவைக்கவும் இந்த மட்டன் நெஞ்சுக்கறி சாப்ஸ் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். Mutton Chops Recipe in Tamil
என்ன தேவை?
மட்டன் நெஞ்சுக்கறி – ஒரு கிலோ
கடலை எண்ணெய் – 150 மில்லி
சோம்பு – 2 கிராம்
பட்டை – 2 கிராம்
கிராம்பு – 2 கிராம்
கல்பாசி – 2 கிராம்
அன்னாசிப்பூ – ஒரு கிராம்
பிரிஞ்சி இலை – ஒரு கிராம்
வெந்தயம் – ஒரு கிராம்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
கறிவேப்பிலை – 2 கிராம்
மஞ்சள்தூள் – 5 கிராம்
பூண்டு விழுது – 30 கிராம்
இஞ்சி விழுது – 20 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 25 கிராம்
தக்காளி – 100 கிராம்
மிளகாய்த்தூள் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
மட்டன் மசாலா செய்ய…
சோம்பு – 3 சிட்டிகை
சீரகம் – 3 சிட்டிகை
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
அன்னாசிப்பூ – 2 கிராம்
இவற்றை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்.
தேங்காய் மசாலா தயாரிக்க…
தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
முந்திரி – 20 கிராம்
கசகசா – 10 கிராம்
(மிக்ஸியில் இவற்றை பேஸ்ட் போல அரைக்கவும். இதுதான் தேங்காய் மசாலா.)
எப்படிச் செய்வது?
வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். சிவந்தவுடன், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி சிவந்தவுடன் இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். Mutton Chops Recipe in Tamil
இத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து கரையுமளவு வதக்கி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து பச்சை வாடை போக நன்கு வதக்கவும். இதில் நெஞ்சுக் கறியைச் சேர்த்துக் கிளறி உப்பு சேர்த்து வேக விடவும். இதில் தேங்காய் மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். மட்டன் வேகத் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவிடவும். மட்டன் நன்கு வெந்ததும் சரியான பக்குவத்தில் அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும். Mutton Chops Recipe in Tamil