கிச்சன் கீர்த்தனா : மஷ்ரூம் மஞ்சூரியன்

தமிழகம்

வித்தியாசமாகச் சாப்பிட விரும்பும் அசைவப் பிரியர்களுக்கு பறப்பன, நடப்பன, ஊர்வன, நீந்துவனவென்று நிறைய சாய்சஸ் உண்டு. ஆனால், சைவம் விரும்புபவர்களுக்கு…  அதிகபட்சம் பன்னீர் பட்டர் மசாலா, கோபி மஞ்சூரியன், மஷ்ரூம் ஃப்ரை…  அவ்வளவு தான். அந்த வகையில் வித்தியாசமானது இந்த காளான் மஞ்சூரியன்.

என்ன தேவை?

காளான் – ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் – 2
குடமிளகாய் – ஒன்று
பூண்டு – 15 பல்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப
டொமேட்டோ சாஸ், சோயா சாஸ் – தலா 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் – 2 டேபிள்ஸ்பூன் + 2 டீஸ்பூன்
மைதா மாவு – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காளானை கழுவவும். 2 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு மற்றும் மைதா மாவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும். காளானை இதில் புரட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தை சதுர வடிவில் நறுக்கவும். பூண்டை தோல் நீக்கி வட்டமாக நறுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு காளானைச் சேர்த்து பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

இத்துடன் பொடியாக நறுக்கிய குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட், உப்பு, டொமேட்டோ சாஸ், சோயா சாஸ் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.

பிறகு, 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது தண்ணீரில் கரைத்து கலவையில் சேர்க்கவும். இத்துடன் பொரித்த மஷ்ரூம் துண்டுகளைச் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து, கலவையை 3 நிமிடம் புரட்டி விட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு: பொரித்த காளான் துண்டுகள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருந்தால், உதிராகப் பிய்த்துவிட்டு பிறகு கிரேவியில் சேர்க்கவும்.

மஷ்ரூம் சுக்கா

பிரெட் மஞ்சூரியன்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *