கிச்சன் கீர்த்தனா: ஈஸி மஷ்ரூம் ஃப்ரை

தமிழகம்

சைவம் உண்பவர்களையும், அசைவம் உண்பவர்களையும் கவரும் உணவுப் பொருள்களில் ஒன்றான காளான், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளைக் கொண்டுள்ளது. உடலில் கொழுப்பைக் குறைக்க உதவும் காளானில் இந்த ஈஸி மஷ்ரூம் ஃப்ரை செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.

என்ன தேவை?

காளான் – ஒரு பாக்கெட்
பெரிய வெங்காயம் – 3
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காளானை கழுவி மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய காளான் துண்டுகளைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, காளான் வேகும்வரை மூடி போட்டு வைக்கவும் (காளானிலிருந்தே நீர் பிரியும் என்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை). காளான் வெந்து, சுண்டியதும் இறக்கவும்.

குறிப்பு: காளானைச் சுத்தம் செய்யும்போது, மைதா மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் காளானை புரட்டிக் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.

அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ஆபத்தானதா?

மஷ்ரூம் கட்லெட்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.