கிச்சன் கீர்த்தனா: மஷ்ரூம் சுக்கா

தமிழகம்

காளான் என்பது இயற்கையாக மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர வகை உயிரினம். உலக அளவில் 12,000 முதல் 15,000 வகையான காளான் வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் 2,000 காளான் இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன.

காளான்கள் பொதுவாக அதிக விலையில், சந்தையில் விற்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும் மனித உடலுக்கு முழுமையான சத்துகளையும் கொடுக்கும் காளான் சுவையானதும்கூட.

இப்படிப்பட்ட காளானில் இந்த சுக்கா செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும்.  சாம்பார், ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன் இது.

என்ன தேவை?

காளான் – 200 கிராம்
சின்ன வெங்காயம் – 150 கிராம்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள், சோம்புத்தூள் – தலா அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிது
பொடியாக நறுக்கிய தேங்காய் – ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 15 பல்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

காளானை விருப்பமான வடிவில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கிலும், பூண்டை வட்டமாகவும் நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு காளான் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, மூடிபோட்டு காளானை 3 நிமிடம் வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து தண்ணீர் சுண்ட (காளானில் இருந்து வெளிப்படும் தண்ணீர்) வதக்கி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு: பத்து நிமிடங்களில் சமைத்துவிடலாம்.  இந்த ரெசிப்பிக்கு, வெங்காயம் அதிகம் தேவைப்படும். சின்ன வெங்காயத்துக்கு பதில் பெரிய வெங்காயமும் சேர்க்கலாம்.

ஸ்டஃப்டு மஷ்ரூம்

மஷ்ரூம் கிரேவி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.