பொங்கல் இல்லாத பொங்கல் பண்டிகையா? இந்த ஆண்டு பொங்கலுக்கு வழக்கமாகச் செய்யும் பொங்கலுக்கு பதிலாக இந்த மஷ்ரூம் அண்டு ரோஸ்ட் வெஜ் பொங்கல் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாமா?
என்ன தேவை?
பச்சரிசி – அரை கப்வெஜ்
ஸ்டாக் – 2 கப்
தண்ணீர் – 2 கப்
பொடியாக நறுக்கிய பட்டன் மஷ்ரூம் – 2 கப்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கவும்)
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
கேரட் – ஒன்று (வட்டமாக நறுக்கவும்)
குடமிளகாய் (மஞ்சள், சிவப்பு) – தலா ஒன்று (சதுரத் துண்டுகளாக்கவும்)
கடைந்த பாலேடு அல்லது ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குக்கரில் வெண்ணெய், 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு காயவைத்து வெங்காயம், பூண்டு, மஷ்ரூம் சேர்த்து வதக்கவும். அதனுடன் வெஜ் ஸ்டாக், தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு அரிசி சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி வேகவிட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு கேரட், குடமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். வெந்த பொங்கலுடன் வதக்கிய காய்கறிகள், கடைந்த பாலேடு, மிளகுத்தூள் சேர்த்துச் சூடாகப் பரிமாறவும்.
புளிப்பு சுவை வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநரே இதெல்லாம் நியாயமா? – அப்டேட் குமாரு
அடுக்கடுக்காய் புகார்கள்… ஒ.செ.வை காப்பாற்றி அவரது மகனுக்கு பதவி கொடுத்த அமைச்சர் முத்துசாமி
ஜனவரி 11-ம் தேதி வரை தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்: முழு விவரம்!
ஹெல்த் டிப்ஸ்: காண்டம் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த விஷயங்களை மறந்துடாதீங்க!