நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தைச் சம அளவில் பெற உதவும் இந்த முருங்கைக்கீரை முட்டைப் பொரியல். இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் இருப்பதால், பார்வைத் திறனை அதிகரிக்கும். நீண்ட நேரத்துக்குப் பசி தாங்கும். உடல் சூட்டைத் தணிக்க உதவும். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் இதை உட்கொள்வது நல்லது. முடி உதிர்தல் பிரச்சினையையும் குறைக்கும்.
என்ன தேவை?
முருங்கைக்கீரை – 1 கப் (உருவியது)
முட்டை – 1
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முருங்கைக்கீரையை அலசி வைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். முட்டையை உடைத்து, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு அலசிய முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து வேகும்வரை வதக்கவும். வெந்ததும், முட்டைக் கலவையை ஊற்றிக் கிளறவும். முட்டை, முருங்கைக்கீரையுடன் சேர்ந்து வெந்ததும் இறக்கவும். முருங்கைக்கீரை முட்டை பொரியல் ரெடி…
கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா
கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் பச்சைப்பயறு