கிச்சன் கீர்த்தனா: முருங்கையிலை அடை

Published On:

| By Monisha

வைட்டமின் ஏ நிறைந்த முருங்கையிலைகளுடன், நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகமுள்ள சிவப்பு அரிசி சேர்த்து செய்யும் இந்த முருங்கையிலை அடை ரத்தச் சோகையைத் தடுக்கும். எளிதில் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புபவர்களுக்கு இரவு நேர சிற்றுண்டியாகவும் அமையும்.

என்ன தேவை?

சிவப்பு அரிசி – ஒரு கப்
துவரம் பருப்பு – அரை கப்
முருங்கையிலை – கால் கப்
காய்ந்த மிளகாய் – 5
சீரகம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அரிசி, பருப்பைத் தனித்தனியே நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்த பின், இவற்றோடு மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துக் கொரகொரப்பாக அரைக்கவும். இந்த மாவில் உப்பு, ஆய்ந்த முருங்கையிலைகளைச் சேர்த்து, தோசைக்கல்லைக் குறைந்த தணலில் வைத்து, எண்ணெய் விட்டு அடை சுட்டு இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்க வேண்டும். நாட்டுச்சர்க்கரையைத் தொட்டுச் சாப்பிட, சுவையாக இருக்கும்.

காராமணிக் கொழுக்கட்டை

வரகரிசி – கற்கண்டுப் பொங்கல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share