கோவையில் பட்டப்பகலில் நீதிமன்றம் அருகிலேயே 4 பேர் கொண்ட கும்பல் 2 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
இந்த நிலையில் வழக்கு ஒன்றில் வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்திருக்கின்றனர்.
அப்போது நீதிமன்றம் அருகே உள்ள கோபாலபுரத்தில் இருவரும் தேனீர் அருந்த வந்த நிலையில், பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தேனீர் கடை முன்பாக கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் கழுத்தில் பலத்த வெட்டுக்காயத்துடன் இருந்த கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியான கோகுலின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, காவல்துறை துணை ஆணையர் சந்தீஸ் விசாரணை நடத்தி வருகின்றார்.
நீதிமன்ற வளாகம் அருகே பட்டபகலில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பட காட்சி போன்று கொலை நடந்ததாக பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். தப்பியோடிய 4 பேரை போலீஸ் தேடி வருகிறது.
கலை.ரா
சரோஜினி நாயுடுவாக ராமராஜன் பட நாயகி!
கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!