தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இனிப்புகளில் ஒன்று ‘சலங்கைக் கொத்து’ என்றும் சொல்லப்படும் இந்த முந்திரிக்கொத்து. பச்சைப்பயறு கொண்டு செய்யக்கூடிய இந்தப் பலகாரம் மிகவும் சுவையானது மட்டுமல்ல… அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான இனிப்பும் ஆகும்.
என்ன தேவை
பச்சைப்பயறு – அரை கிலோ
வெல்லம் – அரை கிலோ
ஏலக்காய் – 4
அரிசி மாவு – 2 கப்
தேங்காய் – அரை மூடி
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
உப்பு – 2 சிட்டிகை
எப்படி செய்வது
பச்சைப்பயற்றை வறுத்து மாவாக அரைத்து வைத்துக்கொள்ளவும். தேங்காயைத் துருவி பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும். மாவுடன் தேங்காயைக் கலந்துகொள்ளவும். வாயகன்ற ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடி செய்து போட்டுக் கரைத்து சூடாகக் காய்ச்சிக்கொள்ளவும்.
பாகு பதம் தேவையில்லை. வெல்லத்தை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். மாவுடன் உப்பு, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலந்து இதில் வெல்லக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுப் பிசையவும்.
அரிசி மாவைத் தண்ணீர், கொஞ்சம் உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு போல கரைத்துக் கொள்ளவும். பருப்பு, வெல்லம் சேர்ந்த மாவில் கொஞ்சம் எடுத்து உருட்டி அரிசி மாவுக் கரைசலில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : கறுப்பு உளுந்து உருண்டை
கிச்சன் கீர்த்தனா: கடற்பாசி ஸ்வீட்