முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் இன்று(நவம்பர் 16) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க கேரள அரசு மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அணையை பராமரிக்க அணை பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்ட அனுமதி வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடவேண்டும்.
பராமரிப்பு பணிகளுக்காக பொருட்களை கொண்டு செல்ல வள்ளக்கடவு வழியாக செல்ல 5 கிலோமீட்டர் தூரத்தில் சாலை அமைக்க அனுமதிக்க வேண்டும்.
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
கலை.ரா
அறநிலையத் துறை பள்ளி, கல்லூரிகளில் காலை சிற்றுண்டி!
மோடி – ரிஷி சுனக் சந்திப்பு: இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!