கிச்சன் கீர்த்தனா: முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம்

குளிர்காலத்தில் ஏற்படும் மூட்டுவலி, முடக்குவாதம் போன்றவற்றின் தாக்கத்தை குறைக்கும் முடக்கத்தான் கீரை உணவுகள்.  எல்லோருக்கும் ஏற்ற இந்த முடக்கத்தான் கீரை – காய்கறி பணியாரம் வீக் எண்ட் ஸ்பெஷலாகவும் அமையும்.

என்ன தேவை?

இட்லி மாவு – 4 கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
கேரட் – ஒன்று
முடக்கத்தான் கீரை – ஒரு கப்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப் பருப்பு – தலா கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, இட்லி மாவில் சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சிறிது உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கி மாவுடன் சேர்க்கவும். பிறகு, நன்கு கலக்கி குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி குழிகளில் எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: மருந்துக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வெஜ் ஜல்ஃப்ரைசி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts