”எம்எஸ்எம்இ கனெக்ட் 2023”: உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு!

தமிழகம்

குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் அரசுக் கொள்முதல் கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தவும் “எம்எஸ்எம்இ கனெக்ட் 2023” நிகழ்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

இது குறித்து வெளியான அறிவிப்பில், ”சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வியாபார மேம்பாட்டு திட்ட நிகழ்வு மார்ச் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வை தமிழ்நாடு ஊரகத் தொழில்கள், மற்றும் சிறுதொழில்கள் துறை செயலாளர் வி. அருண்ராய் மார்ச் 3 அன்று காலை 9 மணிக்குத் தொடங்கி வைப்பார்.

மத்திய குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையின் கூடுதல் இயக்குநர் சுரேஷ் பாபு இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்குவார்.

2023 மார்ச் அன்று பிற்பகல் 5 மணிக்கு நடைபெறும் நிறைவு நிகழ்வில் மாநில குடிசைத்தொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள், சிறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.

இந்த 2 நாள் நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் நிறுவனங்களின் உயர்நிலை அதிகாரிகள் கலந்துகொள்வார்கள்.

இந்த நிகழ்வுகளில் 500க்கும் அதிகமான குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், 30க்கும் அதிகமான பெரு நிறுவனங்கள், கொள்முதல் செய்வதற்கான அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காகவும் எம்எஸ்எம்இ- க்களை மேம்படுத்துவதற்காகவும் மத்திய அரசு கொள்முதல் கொள்கையை உருவாக்கியுள்ளது.

இதன்படி மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் சரக்குகள், அல்லது சேவைகளின் ஆண்டுக் கொள்முதலில் குறைந்தபட்சம் 25% த்தை எம்எஸ்எம்இ-க்களிலிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதன் துணை இலக்காக நான்கு சதவீதப் பொருட்களை எஸ்சி / எஸ்டி தொழில்முனைவோருக்கு சொந்தமான எம்எஸ்எம்இ-க்களிலிருந்து 4 சதவீதத்தையும்,

பெண் தொழில்முனைவோருக்கு சொந்தமான எம்எஸ்எம்இகளிலிருந்து 3 சதவீதத்தையும் கொள்முதல் செய்ய துணை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை தீவிரமாக செயல்படுத்துவது புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தற்சார்பு இந்தியா முன்முயற்சியாக உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு அளிப்பது ஊக்கப்படுத்துவது போன்றவை இந்த இரண்டு நாள் நிகழ்வின் நோக்கமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

தேசிய மகளிர் தினம்: ஒரே ஒரு நாள் தமிழ்நாட்டைப் பின்பற்றும் ராஜஸ்தான்

தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன? ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *