மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடல் இன்று (செப்டம்பர் 30) 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், சென்னை, தேனாம்பேட்டை, ரத்னா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் காலை 11.20 மணி அளவில் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேளாண்மை, சுற்றுச்சூழல், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து எம்.எஸ்.சுவாமிநாதனின் இறுதி ஊர்வலம் காலை 10 மணிக்கு மேல் தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வளாகத்தில் இருந்து தொடங்கியது.
பின்னர் பெசன்ட் நகர் மயானத்தில் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மோனிஷா
சென்சார் போர்டு விவகாரம்: மோடிக்கு நன்றி தெரிவித்த விஷால்
பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!