mp ravikumar ashwini vaishnaw

”திண்டிவனத்தில் விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும்”: எம்பி ரவிக்குமார் கோரிக்கை!

தமிழகம்

திண்டிவனத்தில் 4 விரைவு ரயில்களை நிறுத்த வேண்டும் என்று மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு விழுப்புரம் விசிக எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட  கிராமங்களுக்கு  திண்டிவனம் ஒரு இணைக்கும் மையமாக திகழ்கிறது.

இந்த நிலையில் காக்கிநாடா எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களை திண்டிவனத்தில் நிறுத்த வேண்டும் என அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எம்பி ரவிக்குமாருக்கு மனு அளித்தனர்.

அவர்களின் கடிதத்தை பெற்றுக்கொண்ட எம்பி ரவிக்குமார், இது தொடர்பாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நேற்று(அக்டோபர் 22) கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,” திண்டிவனத்துக்கு அருகில் உள்ள சிப்காட் மற்றும் சிட்கோ பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் இங்கு பணிக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்றவாறு ரயில் சேவைகள் இல்லை.

அதனால், திண்டிவனம் ரயில் நிலையத்தில் கச்சிகுடா எக்ஸ்பிரஸ்(17653/17654), காக்கிநாடா எக்ஸ்பிரஸ்(17655/17656), வைகை எக்ஸ்பிரஸ்(12635/12636) மற்றும் பல்லவன் எக்ஸ்பிரஸ்(12605/12606) ஆகிய விரைவு ரயில்களை நிறுத்தவேண்டும்;

ரயில் வருகை, புறப்பாடு மற்றும் கோச் நிலைகள் பற்றிய அறிவிப்புகளைக் காண்பிப்பதற்கான அறிவிப்புப் பலகைகளை நிறுவ வேண்டும்.

காத்திருப்பு அறைகள் மற்றும் நடைமேடைகளில் டிவிக்களை அமைக்கவேண்டும்.

பயணிகளுக்குக் கழிப்பறைகளை நிறுவ வேண்டும்.

ஒவ்வொரு நடைமேடையையும் முன்பதிவு அலுவலகம் மற்றும் பார்சல் அலுவலகத்துடன் இணைக்கும் டிராலி பாதையை அமைக்க வேண்டும் ” என்று ரயில்வேதுறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார் எம்பி ரவிக்குமார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ரூ.59,000 நெருங்கிய தங்கம் விலை… அதிர்ச்சியில் மக்கள்!

தீவுத்திடலில் பட்டாசுக் கடை அமைக்க ஏல அறிவிப்பு வெளியானது!

சீட்டுக்கட்டு போல் சரிந்த 6 மாடி கட்டடம்… பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *