காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார். morning breakfast tender cancelled
தமிழ்நாட்டில் 1 முதல் 5 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மட்டும் 356 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க டெண்டர் விடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளான பாமக, பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்திலும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது காலை உணவு திட்டத்தை தனியாருக்கு வழங்கும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்து மேயர் ப்ரியா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் 356 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 49 ஆயிரத்து 147 குழந்தைகள் பயன்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் வெளி நிறுவனத்தின் வாயிலாக காலை உணவு சமைத்து பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கோரும் பணி ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு உணவு சமைத்து வழங்கும் பணியை சென்னை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும்” என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.