பயணிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து சென்னை – தூத்துக்குடி, சென்னை – திருச்சி இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்பட உள்ளது. More flights operated Trichy
தற்போது, சென்னை – தூத்துக்குடி இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனமானது தினமும் 8 விமானங்களை இயக்கி வருகிறது. ஆனால், அதிகப்படியான பயணிகள் வருவதால் அனைத்து இருக்கைகளும் விரைவில் நிரம்பி விடுகிறது. மேலும், பண்டிகை நாட்களில் சீட் கிடைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இதனால் சென்னை – தூத்துக்குடி இடையே கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மார்ச் 30-ஆம் தேதியில் இருந்து சென்னை – தூத்துக்குடி இடையே தினமும் 4 விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒருநாளைக்கு 12 விமானங்கள் இயக்கப்பட உள்ளது.
அதேபோல, சென்னை – திருச்சி இடையே இண்டிகோ நிறுவனம் 14 விமானங்களை இயக்கி வருகிறது. இந்தநிலையில், ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் கூடுதலாக இரண்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது.
புதிதாக இயக்கப்படும் இந்த விமானமானது சென்னையில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு திருச்சி சென்றடையும். திருச்சியிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் விமானம் இரவு 9.15 மணிக்கு சென்னை வந்தடையும். மேலும், மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கும் கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளது. More flights operated Trichy