மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று (ஆகஸ்ட் 9) திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று (09.08.2022) மொஹரம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முஸ்லீம் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் மொஹரம் பண்டிகை முக்கியமானதாகும்.
வழக்கமாக, பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறையாகும். மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் பூங்கா இன்று திறந்திருக்கும். அதற்கு பதிலாக வருகிற வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவும் இன்று திறந்திருக்கும் என்றும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செல்வம்
25ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு: பொன்முடி