மூன்று நாள் பயணமாக இன்று (ஜனவரி 19) தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னையில் கேலோ இந்தியா போட்டியை துவக்கி வைக்கிறார்.
இதனை தொடர்ந்து, நாளை காலை திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். நாளை இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார்.
நாளை மறுநாள் காலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடும் பிரதமர் மோடி, பின்னர் தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு, டெல்லி திரும்புகிறார்.
இந்தநிலையில், பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தருவதை முன்னிட்டு, இன்று முதல் நாளை மதியம் 2.30 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஜனவரி 19 மாலை 6.00 முதல் ஜனவரி 20 மதியம் 02.30 மணி வரை பாதுகாப்பு நலன் கருதி பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் மேலும் ஒரு எம்.பி!
தனிப்பட்ட தகவல்களை அதிகம் சேகரிக்கும் ஆப்ஸ்கள் இதுதான்… வெளியான அதிர்ச்சி தகவல்!