modi Chennai visit traffic diversion

மோடி விசிட்: சென்னையில் எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?

தமிழகம்

பிரதமர் மோடி நாளை (மார்ச் 4) மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கல்பாக்கம் செல்லும் மோடி, ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்தநிலையில், பிரதமர் மோடி சென்னை வருகையை ஒட்டி அண்ணாசாலை ஒய்எம்சிஏ நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை, இந்த சாலைகளில் தவிர்த்து மாற்று வழியில் பயணிக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“பிரதமர் மோடி நாளை (மார்ச் 4) மாலை 5 மணியளவில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறும் “தாமரை மாநாடு’ பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள் அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் முதல் அண்ணா மேம்பாலம் வரை மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக அண்ணாசாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு மற்றும் 100 அடி சாலை வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகையால், வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை வணிக வாகனங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் தடை செய்யப்படும்.

மத்யகைலாஷ் முதல் ஹால்டா சந்திப்பு வரை

இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு

மவுண்ட் பூந்தமல்லி சாலை ராமாபுரம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை. அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சந்திப்பு

விஜயநகர் சந்திப்பு முதல் கான்கார்ட் சந்திப்பு வரை (கிண்டி)

அண்ணா சிலை முதல் மவுண்ட் ரோடு வரை

தேனாம்பேட்டை, நந்தனம் காந்தி மண்டபம் சாலை.

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சத்யராஜ் மகள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா?

மோடி நாளை சென்னை வருகை: பயணத்திட்ட விவரங்கள் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *