Rain Update: இந்த மாவட்டங்களுக்கு மழை உண்டு… வெளியான ஹேப்பி நியூஸ்!

தமிழகம்

கொளுத்தும் கோடை வெயிலுக்கு மத்தியிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று (மார்ச் 3௦) தொடங்கி ஏப்ரல் 1 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 2, 3 தேதிகளில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று தொடங்கி ஏப்ரல் 3 வரை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரியின் இரணியல் பகுதியில் 2 சென்டிமீட்டர் மழையும், குளச்சல் பகுதியில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை”, என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடம் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் 40 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,  நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மீம்ஸ்…கார்டு…ரீல்ஸ்…விதவிதமா மெசேஜ் கொட்டுது பாரு… கோவையில் ஐ.டி.,விங் ஆட்டத்துல ஜெயிக்கப்போவது யாரு?

டேனியல் பாலாஜி… கதறிய தாயார் – கலங்க வைக்கும் காட்சி!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஸ்டாலினுக்கு மனமில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *