காவல்நிலையத்தில் காணாமல் போன செல்போன்கள்: திருடர்கள் கைவரிசை?

Published On:

| By christopher

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் போலீசார் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த மொபைல் போன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மொபைல் போன் என இரண்டு செல்போன்கள் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரின் பயன்பாட்டிற்காக சியுஜி சிம் கார்டுடன் கூடிய மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை டவுன் காவல் நிலையத்திலும் அது போன்ற ஒரு மொபைல் போன் வழங்கப்பட்டு காவல்துறையினரின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

நேற்றைய தினம் இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தனது போனுடன், காவல் நிலையத்தில் உள்ள போனையும் காவல் நிலையத்தில் இருந்த மேஜை ஒன்றில் வைத்து விட்டு இரவில் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

ரவுண்ட்ஸ் சென்று விட்டு திரும்பும் போது அதிகாலை 3 மணிக்கு டேபிளில் வைத்த செல்போனை தேடியுள்ளார். இரண்டு போன்களும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது .

மறந்து வேறு எங்கும் வைத்து விட்டோமா என காவல் நிலையத்தை சல்லடை போட்டு தேடியுள்ளனர் .

இரவு பணியில் சிறப்பு உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் ஒருவரும் முதல் நிலை காவலர் பணியில் ஒரு பெண் காவலர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர் .

செல்போன் திருடு போன இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை வரை செல்போனை தேடிய நிலையில் செல்போன்கள் இரண்டும் ஸ்விட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளது.

வேறு வழியின்றி இது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததன் அடிப்படையில் காவல் நிலையத்திலிருந்து செல்போன்கள் திருடு போனதா அல்லது வேறு எங்கேயும் விழுந்ததா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆராயப்பட்டு வருகிறது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையும் நடை பெற்று வருகிறது.

இரவில் விசாரணைக்கு வந்த நபர்கள் யாரும் செல்போன்களை திருடி சென்று விட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மாநகர காவல் துறையில் போதுமான காவலர்கள் இல்லை. பணியாற்றும் காவலர்களும் இரவு பகல் என ஓய்வின்றி பணியாற்றும் நிலை உள்ளது. இதனால் மன சோர்வுடன் பணியாற்றும் நிலைமையே உள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் எழுத்தர் பணியை மேற்கொள்ளும் போது செல்போன்கள திருடு போயுள்ளதாக கூறப்படுகிறது .

காவலர்கள் பற்றாக்குறையே இது போன்ற சம்பவம் நடைபெற காரணமாக இருப்பதாக ஓய்வு பெற்ற காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

காவல் நிலையத்திலேயே காவலர்கள் பயன்படுத்தும் செல்போன் காணாமல் போன சம்பவம் மாநகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சரவணன்

எம்.ஜி.ஆர் படத்தை மறைப்பதா? – ஜெயக்குமார் காட்டம்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் டிஸ்சார்ஜ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share