Mobile Phone and Camera Banned inside Palani Murugan Temple

பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை!

தமிழகம்

பழனி முருகன் கோயிலில் செல்போன், வீடியோ சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்கு சென்று வருகின்றனர். வார விடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு காணப்படுவது வழக்கம். குறிப்பாக வார விடுமுறை நாளில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

சமீபத்தில் பழனி கோயில் கருவறையை பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவுசெய்து‌ தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார். இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. பழனி கோயில் கருவறையை செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்று விதி இருந்தும் சில பக்தர்கள் விதிகளை மீறி திருக்கோயில் கருவறையைப் படம் பிடித்து விடுகின்றனர்.

இந்த நிலையில், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, பழனி முருகன் கோயிலில் செல்போன், வீடியோ சாதனங்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப் பாதை, விஞ்ச் கார் மற்றும் ரோப் கார் பகுதிகளில் செல்போன்களை, கைப்பேசி பாதுகாப்பு மையங்களில் ரூ.5 செலுத்தி வைத்துச்செல்லலாம் என்றும், தரிசனத்துக்குப் பிறகு கைபேசி மையங்களில் தங்களுடைய செல்போன்களை பெற்றுச் செல்லலாம் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராஜ்

பாஜகவுக்கு சமூகநீதியில் அக்கறை உள்ளதா? – ஸ்டாலின் கேள்வி!

வேலைவாய்ப்பு: சென்னை மாநகராட்சியில் பணி!

கிச்சன் கீர்த்தனா: ஸ்வீட் பச்சைப்பயறு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *